Saturday, June 20, 2009

மீசைக்காரியும் மீசைக்காரனும் !

முத்தமிடத் தொடங்குகையில்

மீசை முந்திக்கொண்டு விட்டது !

அதற்கும் உன்மேல் கொள்ளை

ஆசையடி !!

.

மீசையின் குறுகுறுப்பை

ரசிக்க தெரியாதவளுக்கு

முத்தம் கொடுத்து

என்ன பயன் ??!!

.

"தன்னைப்பாராமல் இதழிலேயே முத்தமிடுவதால்

குத்தி காயப்படுத்துகிறதுன் மீசை "சொன்னேன் நான்

"நீ இல்லாத போதும் உன் வாசனைக்காய்

உன்னை நுகர்ந்து வைத்துக்கொள்ள

சொன்னவனே நான் தான் " சொன்னான் அவன் !!

.

உன் கூந்தலை நுகரும்

போதெல்லாம் என்

மீசை வளரத்துடிப்பதை

எப்படி சொல்வேன்

உன்னிடம் !??

4 comments:

  1. முதல் கவிதை பதிவா இது???

    நம்ப முடியவில்லை

    அழகான கவிதைகளின் அணிவகுப்பு

    வாழ்த்துக்கள் இனியா!!!!

    ReplyDelete
  2. "தன்னைப்பாராமல் இதழிலேயே முத்தமிடுவதால்

    குத்தி காயப்படுத்துகிறதுன் மீசை "சொன்னேன் நான்

    "நீ இல்லாத போதும் உன் வாசனைக்காய்

    உன்னை நுகர்ந்து வைத்துக்கொள்ள

    சொன்னவனே நான் தான் " சொன்னான் அவன் !!


    ம்ம்ம்ம்

    அசத்தல்

    ReplyDelete